தாயகம்

இலங்கையில் பெப்ரவரி 1 முதல் கட்டாயப்படுத்தப்படும் சட்டம்! வெளியான முக்கிய தகவல்!

பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் கட்டட திட்டங்களுக்கு ஒப்புதல் கோரும் போதும், வாகனம் பதிவு செய்யும் போதும், போக்குவரத்து வருவாய் உரிமம் புதுப்பிக்கும் போதும், நில உரிமை பதிவு செய்யும் போதும் வரி அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


இதேவேளை, வரி அடையாள இலக்கம் பெறப்பட்டிருப்பின் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். வருடாந்த வரி விலக்கு வரம்பான 12 இலட்சம் ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டியவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். வரி அடையாள அட்டை பதிவு செய்வது கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 1ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் வரி அடையாள இலக்கம். மேலும், ஒருவரது ஆண்டு வருமானம் 12 இலட்சத்துக்கு மேல் இருந்தால், அவர் அல்லது அந்த அமைப்பு வரி செலுத்த வேண்டும். அவர்கள் நேரடியாக வரி செலுத்துபவராக மாற்றப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button