உலகம்

🇨🇦கனடாவில் மீண்டும் தலைதூக்கும் கொவிட் வைரஸ்! அதிர்ச்சியில் நிபுணர்கள்!

கனடாவில் கூடுதலாக ஆதிக்கம் செலுத்தும், கொவிட் வைரஸ் திரிபாக ஜே1 திரிபு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்டின் ஜே1 திரிபு அதிகளவு பரவி வருவதாக சுகாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் பதிவாகியுள்ள கொவிட் தொற்று உறுதியாளர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் ஜே1 திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் என பொதுச் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.

கனடாவில், கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 9ம் திகதி ஜே1 திரிபு முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. இந்த ஜே1 உப திரிபு பரவுகையின் வீரியம் மேலும் பல உப திரிபுகளை பரவச் செய்யும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஜே1 திரிபு உலகில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வரும் கோவிட் திரிபுகளில் ஒன்று என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

Back to top button