பிரான்ஸ்

பிரான்ஸ் நீதிமன்ற முன்றலில் நிகழ்ந்த பயங்கரம்!

மொன்பெலியே (Montpellier – Hérault) நீதிமன்ற முன்றலில் இரண்டு உயிர்கள் இன்று போயுள்ளன. மொன்பெலியே சட்டவியல் நீதிமன்ற (Tribunal judiciaire)முன்றலில் தன் முன்னாள் துணைவியைச் சுட்டுக் கொண்று விட்டுத் தானும் தற்கொலை செய்த சம்பவம் இன்று நடந்துள்ளது.

ஏற்கனவே துணைவி மீதான வன்முறைக்குத் தண்டனை பெற்றிருந்த இந்த நபர், அன்றும் நீதிமன்றத்தில் துணைவி மீதான வன்முறைக்கான வழக்கைச் சந்திக்க வேண்டியிருந்த நிலையில், அதே நீதிமன்ற வாயிலில் தன்மீது வழக்குத் தொடுத்திருந்த முன்னாள் துணைவியைச் சுட்டுக் கொன்று விட்டு அதே துப்பாக்கியால் தன்னையும் துப்பாக்கியால் சுட்டுச் சாவடைந்துள்ளார்.

அறுபதுகளின் வயதுகளில் உள்ள இருவருக்கும், வன்முறையினால் விவாகரத்து வழக்கு இறுதி நிலைக்கு வந்திருந்த நிலையில், நீதிமன்ற வாசலில் இந்தக் கொலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Back to top button