பிரான்ஸ்

பிரான்ஸில் குழு மோதல்! சுற்றி வளைத்த காவல்துறை!

குழு மோதல் ஒன்றை தடுக்க முற்பட்ட வேளையில், காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்க முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் Porte-de-Clignancourt மெற்றோ நிலையம் அருகே இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மாலை 6 மணி அளவில் பல்வேறு இளைஞர்கள் இணைந்து வீதி ஒன்றின் நடுவே மோதலில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இந்த மோதலை தடுப்பதற்காக காவல்துறை அதிகாரி ஒருவர் முற்பட்டபோது அவரை இளைஞன் ஒருவர் தாக்க முற்பட்டுள்ளார்.

கத்தி ஒன்றை உருவி எடுத்த குறித்த இளைஞன், காவல்துறை வீரரை தாக்க முற்பட்டார். ஆனால் அதிஷ்ட்டவசமாக அவர் காயமடையவில்லை. இச்சம்பவத்தில் இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் தற்போது 18 ஆம் வட்டார காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Back to top button