பிரான்ஸ்

பிரான்ஸில் உருவாகவுள்ள paracetamol நிறுவனம்!

காச்சல், தலைவலி, உடல்நோ என பல நோய்களுக்கு நிவாரணியாக மக்களால் பயன்படுத்தப்படும் ‘paracétamol’ மாத்திரைகளுக்கு அண்மைக்காலமாக பிரான்ஸ் உட்பட ஐரோப்பா எங்கும் பெரும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், பிரான்சில் Toulouse க்கு தெற்கே உள்ள Oncopole தளத்தில் 2025ம் ஆண்டில் புதிய தயாரிப்பு நிலயத்தை நிறுவ உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆண்டொன்றுக்கு 4.000 தொன் மாத்திரைகளை தயாரித்து சந்தைப்படுத்த உள்ளதாகவும், இதற்காக 28 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே ஐரோப்பாவில் இருந்த ‘paracétamol’ மாத்திரைகளைத் தயாரிக்கும் நிறுவனம் 2009ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய சுகாதார அமைப்பால், வருமானம் குறைவாக உள்ளது என காரணம் கூறி மூடப்பட்டது, அதன் பின்னர் ஆசிய நாடுகளில் இருந்தும், அமெரிக்காவிடம் இருந்தும் குறித்த மாத்திரைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Back to top button