பிரான்ஸ்

🇫🇷இல் து பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இல் து பிரான்சின் சில பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பனிப்பொழிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Météo-France சில பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இன்று இரவு 10 மணி அளவில் பனிப்பொழிவு இடம்பெறும் எனவும், நாளை திங்கட்கிழமை நண்பகல் வரை இந்த பனிப்பொழிவு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு தலைநகர் பரிசில் -4℃ வரை குளிர் நிலவும் எனவும் பனிப்பொழ்வு பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பனிப்பொழிவு காரணமாக நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Back to top button