தாயகம்

திருமணத்திற்காக கஞ்சா வித்த இளைஞன்! வெளியான அதிர்ச்சி தகவல்!

தனது திருமணத்துக்கு பணம் சேர்க்க கஞ்சா விற்பனை செய்த ஓபத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு உறுதுணையாக இருந்த தாயாரும் ஜா -எல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 2 கிலோ 170 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.


ஆகஸ்ட் மாதம் திருமணம்
24 வயதுடைய சந்தேக நபருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதற்கு 15 இலட்சம் ரூபா பணம் தேவைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த பணத்தைப் பெற்றுக்கொள்ள முறையான வழியில்லாததால் தனது தந்தையிடமிருந்து பெறப்பட்ட 5 இலட்சம் ரூபாவை கொடுத்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வந்தமையும் தெரியவந்துள்ளது. வாங்கிய கஞ்சாவை தனது தாயின் உதவியுடன் சிறிய அளவில் விற்பனை செய்து வந்துள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Back to top button