🇫🇷பிரான்ஸில் இருந்து 4686 பேர் வெளியேற்றம்! வெளியான முக்கிய தகவல்!
பிரான்சில் இருந்து சென்ற வருடத்தில் 4,686 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார். பிரெஞ்சு சட்டதிட்டங்களை மீறியும், குற்றச்செயல்களிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் 1,800 பேரும் 2022 ஆம் ஆண்டில் 3,615 பேரும் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 30% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. மக்ரெப் நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், துணை-சஹரன் நாடுகள் மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே பெரும்பாலானவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
சென்ற வருட இறுதியில் புதிய சட்டதிட்டங்களுடன் கூடிய குடிவரவு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இனிவரும் காலங்களில் குடியேற்றவாதிகள் தொடர்பில் மேலும் இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.