தாயகம்

யாழ் நல்லூர் ஆலயத்தின் முன்பாக பரிதாபமாக பறிபோன உயிர்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (23) காலை நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை கடந்த திங்களன்று யாழ் தீவக பகுதியிலும் பேருந்தில் இருந்து பெண் ஒருவர் , இறங்க முற்ப்பட்டபோது தவறி விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button