தாயகம்

யாழில் கோர விபத்து! பரிதாபமாக உயிரிழந்த உத்தியோகத்தர்கள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று (12) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31வயதுடைய அன்ரன் பிலிப்பின் தாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

பணி முடித்து வீடு திரும்பிச் சென்று கொண்டிருகும் வேளை இரவு 10.00மணியளவில் மருதங்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button