பிரான்ஸ்
பிரித்தானிய நோக்கிய பயணம்! பரிதாபமாக பலியான சிறுமி!
பிரித்தானியா நோக்கி கடற்பயணம் மேற்கொண்ட ஏழு வயது சிறுமி ஒருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளார். 16 அகதிகளுடன் Dunkerque கடற்கரையில் இருந்து புறப்பட்ட படகு ஒன்று சில கிலோமீற்றர் தூரம் பயணித்த நிலையில், கடலில் மூழ்கியுள்ளது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
படகுக்குள் தண்ணீர் புகுந்து, படகு மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்கியது. கடற்படையினர் சம்பவ இடத்துக்கு வந்தடையும் முன்னர் படகில் பயணித்தவர்கள் தண்ணீரில் தத்தளிக்கத் தொடங்கினர். இச்சம்பவத்தில் ஏழு வயதுடைய சிறுமி கடலில் மூழ்கி பலியாகியுள்ளார்.
அவர்களது பெற்றோர்களும் படகில் இருந்துள்ளனர். அவர்கள் பயணித்தது திருடப்பட்டதாக தெரிவிக்கப்படும் படகு ஆகும் என Préfet du Nord காவல்துறையினர் தெரிவித்தனர். மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.