பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸ் விற்பனை கூடத்தில் நிகழ்ந்த பாரிய கொள்ளை!

தொலைபேசி விற்பனை கூடம் ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 60,000 யூரோக்கள் மதிப்புள்ள தொலைபேசிகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். ஜனவரி 14- 15 ஆம் திகதிக்குட்பட்ட இரவில் இச்சம்பவம் Vigneux-sur-Seine (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Valdoly வணிகவளாகத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், அங்கிருந்த தொலைபேசிகள், மல்டிமீடியா உபகரணங்கள் போன்றவற்றை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். அதேவேளை, 3,000 யூரோக்கள் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

அதிகாலை 2 மணியில் இருந்து 4 மணிக்குள்ளாக இச்சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடையில் இருந்த கண்காணிப்பு கமராங்களில் தொடர்பினை கொள்ளையர்கள் துண்டித்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டதாகவும் அறிய முடிகிறது.

Back to top button