பிரான்ஸ்
🇫🇷பிரான்ஸில் கண்டன ஆர்ப்பாட்டம்! அகதிகளின் வேண்டுகோள்!
சில வாரங்களுக்கு முன்னர் அரசு நிறைவேற்றிய புதிய குடிவரவு சீர்திருத்தத்தைக் கண்டித்து, நேற்று வெள்ளிக்கிழமை பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ஆவணங்கள் இல்லாத குடியேற்றவாதிகள் பலர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
அகதிகள் மற்றும் குடியேற்றவாதிகள் மீது மிக இறுக்கமான நடவடிக்கைகளை ஏற்படுத்த அனுமதிக்கும் குறித்த சட்டத்தினால் பலர் பாதிக்கப்படுவதாகவும், மிக விரைவாக எங்களுக்கு ஆவணங்கள் வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். Place de la République பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200 வரையான ஆவணங்கள் அற்ற அகதிகள் ஈடுபட்டிருந்தனர்.