தாயகம்

யாழ் பெண் மர்ம முறையில் மரணம்!

கொழும்பு வெள்ளவத்தையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 49 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தாயார் என்பதுடன், பெண்ணின் கணவர் நேற்று முன்தினம் தனிப்பட்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று மகன் வீட்டில் படித்துக் கொண்டிருந்த போது கட்டிடத்தின் 8வது மாடிக்கு சென்று அதிலிருந்து குதித்துள்ளமை விசாரணையில் தெரியவந்தது.


உயிரிழந்த பெண்ணின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button