பிரான்ஸ்

உலக சாதனை படைத்த இரு பிரான்ஸ் நபர்கள்!

ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, இரு பிரெஞ்சு நபர்கள் உலகசாதனை படைத்துள்ளனர். Guillaume Koudlansky de Lustrac மற்றும் Vincent Bremond என அறியப்படும் இருவரும், மொத்தமாக 2,196 கிலோமீற்றர்கள் மிதிவண்டியில் பயணித்துள்ளனர். இதில் என்ன சாதனை இருக்கப்போகிறது என ஆச்சரியப்பட்டால், சாதனை இருக்கிறது.


அவர்கள் பயணித்த பாதை ஒலிம்பிக் வளையங்கள் போன்று உள்ளன. ஐந்து வளையங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து காட்சியளிக்கும் இந்த ஒலிம்பிக் இலட்சனையை அப்படியே அச்சொட்டாக தங்களது மிதிவண்டி பயணத்தை அமைத்துக்கொண்டனர்.
நாள் ஒன்றுக்கு 220 கிலோமீற்றர்கள் தூரம் பயணித்து மொத்தமாக 96 மணிநேரங்கள் செலவிட்டு இந்த சாதனை உருவாக்கப்பட்டுள்ளது.


முன்னதாக இதே போன்றதொரு சாதனை பிரான்சில் நிகழ்த்தப்பட்டிருந்த நிலையில், அந்த சாதனையை 34 கிலோமீற்றர்கள் அதிகமாக பயணித்து இந்த இரட்டையர்கள் முறியடித்துள்ளனர். அவர்களது இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் விரைவில் இணைக்கப்பட உள்ளது.

Back to top button