விசேட செய்தி! பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட மதபோதகர்!
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் (இமாம்) Mahjoub Mahjoubi நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். சற்று முன்னர் உள்துறை அமைச்சர் Gérald Darmanin இத்தகவலை அறிவித்தார். இன்று வியாழக்கிழமை பெப்ரவரி 22 ஆம் திகதி காலை அவர் கைது செய்யப்பட்டு, காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படவேண்டியவர் என உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சற்று முன்னர் அவர் வெளியேற்றப்பட்டதாக அமைச்சர் அறிவித்துள்ளார். தீவிர மதவாத மற்றும் அடிப்படை வாத சிந்தனை கொண்ட அவர், பலநூறு மாணவர்களுக்கு மத போதனை செய்வதாகவும், பிரான்ஸ் மீது அதீத வெறுப்பு கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
துனிசியாவைச் சேர்ந்த அவர், அண்மையில் பல காணொளிகளை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் பல ஆபத்தான விஷம சிந்தனைகளை விதைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.