தாயகம்

இலங்கையில் மீண்டும் பயங்கரம்! படுகொலை செய்யப்பட்ட இளைஞன்!

களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரவல பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (28.02.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

ஹொரவல, வெலிபன்ன பகுதியைச் சேர்ந்த என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பிரதேசத்தில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழா ஒன்றில் வைத்து இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதோடு, பூப்புனித நீராட்டு விழா வீட்டிற்கு வந்த இரண்டு தரப்பினருக்கு இடையில் நிலவிய பழைய தகராறு காரணமாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அது முற்றிய நிலையில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Back to top button