தாயகம்பிரான்ஸ்

இலங்கை வந்த பிரான்ஸ் நபர்! அதிர்ச்சி மரணத்தால் பரபரப்பு!

பிரான்ஸில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த நபரொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் கடந்த 18ஆம் திகதி 44 பேருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்ததாக கூறப்படுகின்றது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மைக்கல் மார்சல் என்ற 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை- அலஸ் தோட்டம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த போது நேற்று அவர் சுகவீனமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Back to top button