பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் கொள்ளையர்களால் பரபரப்பு!

பரிஸ் 2 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றினை உடைத்து உள்ளே நுழைந்த ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் சிலர், அங்கிருந்து 20,000 யூரோக்கள் பணத்தினை கொள்ளையிட்டுள்ளனர். நேற்று ஜனவரி 11 ஆம் திகதி வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள வீடொன்றுக்குள் மாலை 4 மணி அளவில் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த குழைந்தை பராமரிப்பாளர் ஒருவரையும், 14 மாத குழந்தை ஒன்றையும் ஆயுத முனையில் பிடித்துள்ளனர்.

பின்னர் வீட்டினை முழுமையாக சோதனையிட்டு, அங்கிருந்த பொருட்கள், நகைகளை கொள்ளையிட்டுள்ளனர். கையுறைகள், முகக்கவசங்கள் அணிந்த குறித்த கொள்ளையர்கள், கைகளில் அரை தானியங்கி பிஸ்டல் துப்பாக்கி வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Back to top button