பிரான்ஸ்
🇫🇷கடும் குளிரில் பிரான்ஸ்!
தலைநகர் பரிஸ் உட்பட இல் து பிரான்ஸ் முழுவதும் கடும் குளிர் நேற்று இரவு முதல் உணரப்பட்டுள்ளது. பரிஸ் காவல்துறையினரால் குளிர் காலநிலை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் இன்று திங்கட்கிழமை காலை -11℃ குளிர் நிலவியிருந்தது.
Trappes (Yvelines) மற்றும் Pontoise (Val d’Oise) நகரங்களில் -8℃ வரையும், Le Bourget (Seine-Saint-Denis) நகரில் -7℃ குளிரும் Nangis (Seine-et-Marne) நகரில் -6℃ குளிரும் பதிவானது. நேற்று இரவு இல் து பிரான்ஸ் மாகாணம் உட்பட நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த எச்சரிக்கை இன்று திங்கட்கிழமையும் தொடர்கிறது.