பிரான்ஸ்

பிரான்ஸில் பத்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பத்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Ardèche, Charente-Maritime, Gard, Gironde, Var, Lozère மற்றும் Aveyron ஆகிய மாவட்டங்களில் பலத்த மழையும், வெள்ளமும் ஏற்படும் எனவும், Alpes-Maritimes மாவட்டத்தில் பனிச்சரிவு அபாய எச்சரிக்கையும், Landes மற்றும் Pyrénées-Atlantiques மாவட்டத்தில் புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக தற்போது Hérault மாவட்டத்துக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Back to top button