பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் குளிரால் ஒருவர் பலி!

வீடற்றவர் (SDF) ஒருவரின் சடலம் மகிழுந்துக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. Poissy (Yvelines) நகரில் இன்று ஜனவரி 20, சனிக்கிழமை காலை இச்சடலம் மீட்கப்பட்டது. rue des Grands Champs வீதியில் அவரது மகிழுந்து தரித்து நின்ற நிலையில், மகிழுந்துக்குள் குளிர் காரணமாக குறித்த 76 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார். கடந்த சில நாட்களாக இல் து பிரான்ஸ் முழுவதும் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், வீடற்றவர்கள் பலர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button