பிரான்ஸ்
🇫🇷பிரான்ஸ் ஜனாதிபதியின் இன்றைய முக்கிய சந்திப்பு! வெளிவந்த முக்கிய தகவல்!
கடந்த வாரம் அரச தலைவர் புதிய அமைத்த பின்னர் பொதுமக்களை ஊடகங்கள் ஊடாக இன்று சந்திக்கிறார். என அரச மாளிகை அறிவித்துள்ளது. இன்று 20:15 மணிக்கு பல நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர் முன்னிலையில் Emmanuel Macron தனது ஊடாகச் சத்திப்பை நிகழ்த்தியுள்ளார். முதலில் பிரான்சின் பொருளாதாரம் மற்றும் குடியேற்ற சட்டம் தொடர்பாக தனது அறிமுக உரையை நிகழ்த்துவார் எனவும் தொடர்ந்து ஊடகவியலாளர் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் எனவும் அரச மாளிகை அறிவித்துள்ளது.
பிரான்ஸ் மட்டும் அன்றி வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளும் இந்த சந்திப்பில் வெளிவிவகார பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன, 20:15க்கு ஆரம்பமாக உள்ள இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இரண்டு மணி நேரங்கள் நீடிக்கும் என அரச மாளிகை தன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.