பிரான்ஸ்

பிரான்ஸில் தொடரும் வெள்ள அனர்த்தம்! ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

#france news#

இன்று மூன்றாவது நாளாக வெள்ள அனர்த்த பாதிப்பு தொடர்வதாக Météo France அறிவித்துள்ளது. Charente-Maritime, Gironde, Puy-de-Dôme, Pyrénées-Atlantique மற்றும் Yonne ஆகிய ஐந்து மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் எனவும், பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

ஐந்து மாவட்டங்களுக்கும் ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தலைநகர் பரிசில் சில இடங்களில் இலேசான மழை தூறல் பதிவாகியிருந்தது. இந்த தூறல் மழை இன்று செவ்வாய்க்கிழமையும் சில இடங்களில் பதிவாகும் என அறிய முடிகிறது.

Back to top button