பிரான்ஸ்

பிரான்ஸில் மீட்கப்பட்ட சடலம்! மூவர் கைது!

நாற்பது வயது மதிக்கத்தக்க வீடற்றவர் (SDF) ஒருவரது சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை பெப்ரவரி 22 ஆம் திகதி Vélizy-Villacoublay (Yvelines) நகரில் உள்ள மேம்பாலம் ஒன்றின் கீழ் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

N118 சாலையை அண்மித்துள்ள குறித்த மேம்பாலத்தின் கீழே பிற்பகல் 3.30 மணி அளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் மூவரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. உடற்கூறு பரிசோதனைகளின் பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும் எனவும் அறிய முடிகிறது.

Back to top button