பிரான்ஸ்

பிரான்ஸில் மீண்டும் தாக்குதல்! படுகாயமடைந்த காவல்துறை!

மீண்டும் காவற்துறையினர் மீது தாக்குதல்!! திருடப்பட்ட சிற்றுந்து ஒன்றை மறிக்க முயன்ற போது காவற்துறையினரின் கட்டளைக்கு இணங்க மறுத்த சிற்றுந்துச் சாரதி காவற்துறையினரை மோதிச் சென்றுள்ளான்.

மெட்ஸ் நகரில் (Metz) நேற்று வெள்ளிக்கிழமை இரவு 20h00 அளவில், மெட்ஸ் நகரின் சிறப்புக் களப் படையான BST (brigade spécialisée de terrain) மற்றும் மாவட்டக் கட்டளைப் பணியகத்த்தின் தலைமை இயக்குநர் ஆகியோர் நடத்திய வீதிச் சோதனையின் போது, அங்கு வந்த திருடப்பட்ட சிற்றுந்து ஒன்றை நிறுத்திச் சோதனையிட முயன்றுள்ளனர். சி

ற்றுந்தில் இருந்து இறங்கிச் சோதனையிட முயன்ற காவற்துறை வீரர், மற்றும் தலைமை இயக்குநர் ஆகியோரை மோதியெறிந்து விட்டு அந்தச் சிற்றுந்தின் சாரதி தப்பியோட முயன்றுள்ளார்.

உடனடியாக மற்றைய காவற்துறையினர், வீதிமறிப்புக் கருவியை (dispositif Diva) எறிந்து, அந்தச் சிற்றுந்தை நிறுத்தியதுடன், சாரதி மீது மின்சாரத் துப்பாக்கியால் தாக்கி கைது செய்துள்ளனர். மோதியெறியப்பட்ட சாவற்துறை வீரனும், மாவட்டக் கட்டளைப் பணியகத்த்தின் தலைமை இயக்குநரான பெண்ணும், சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சில் காவற்துறையினரின் வீதிச் சோதனைக் கட்டளை மீறல்கள் வருடத்திற்கு 25.000 இற்கு மேல் நடப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவலை, காவற்துறையினரின் தலைமையகம் வழங்கி உள்ளது

Back to top button