தாயகம்

யாழில் மகன் வருகைக்காக காத்திருந்த தாயாருக்கு பேரதிர்ச்சி! காலமானார் சாந்தன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தமிழகத்தின் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

கோமாநிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் மரணம் அடைந்தார்.

அதேவேளை மகனின் வரவுக்காய் யாழ்ப்பாணத்தில் காத்திருக்கும் அவரது தாயார் ஜனாதிபதி ரணில் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் மகனை நாட்டுக்கு வரவழைக்க மனு கொடுத்திருந்த நிலையில், தமிழகத்தில் சந்தன் உயிரிழந்துள்ளமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button