பிரான்ஸ்

பிரான்ஸில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி!

#france news#

ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தில் சிக்கி காணாம போயிருந்த நான்கு வயது சிறுமியின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக Gard மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தந்தை மற்றும் அவரது இரு பிள்ளைகளுடன் மகிழுந்து ஒன்று வெள்ளதில் அடித்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தேடப்பட்டு வந்தனர்.

மகிழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணி பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று மார்ச் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 4 வயதுடைய சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே மகிழுந்தில் அடித்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுவன் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறார். மொத்தமாக ஆறு பேர் இந்த வெள்ளத்தல் சிக்கி பலியாகியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button