பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் பயங்கர விபத்து! நால்வர் பலி!

இரண்டு கனரக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Fontainebleau (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. D142 இரண்டாம்கட்ட சாலையில் இரவு 10 மணி அளவில் பயணித்த இரு வாகனங்களே ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. இதில் வாகனங்களின் இரு சாரதிகளும், வாகனத்தின் முன் இருக்கைகளில் இருந்து பயணித்த மேலும் இருவரும் பலியாகினர்.

மூன்று ஆண்களும், ஒரு பெண்ணுமே பலியானவர்களாவார்.
விபத்தை அடுத்து வீதியின் இரு பகுதிகளிலும் நீண்ட நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது. வீதி ஈரமாக வழுக்கும் தன்மையுடன் இருந்ததாகவும், வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு கனரக வாகனம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

Back to top button