பிரான்ஸ்

பிரான்ஸில் திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டம்! தடை விதித்த காவல்துறை!

நாளை பெப்ரவரி 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரிசில் மூன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட இருந்த நிலையில், மூன்றுக்கும் பரிஸ் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேற்படி ஆர்ப்பாட்டங்கள் அல்ஜீரிய அரசாங்கத்துக்கு எதிராக Place de la République பகுதியில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. “அல்ஜீரியாவின் நீதி மற்றும் ஊழலுக்கு எதிராக இயக்கம்’ என தங்களை குறிப்பிடும் அமைப்பினரே ஆர்ப்பாட்டத்தினை திட்டமிட்டிருந்தனர்.


பொது சட்ட ஒழுங்குகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இந்த தடை விதிக்கப்படுவதாக காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

Back to top button