தாயகம்

ஆணாக நடித்த யுவதியால் பரபரப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆண் குரலில் பேசி 15 வயது மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டு மாணவியின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் 19 யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி நேற்று மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இருவரும் சுமார் ஒரு வருடமாக காதல் வயப்பட்டுள்ளனர் என்பது சமூக வலைத்தளங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் யுவதி கைது செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி, இளைஞருடன் காதல் தொடர்பு வைத்திருந்தவர் இளம்பெண் என்பது தெரிய வந்தது.


கலென்பிந்துன்வெவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சிறுமி, மாத்தறையைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில், சிறுமி தன்னை சந்திக்க மறுத்ததால், சந்தேக நபரான யுவதி, தன்னிடம் இருந்து பெற்ற தகாத படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

Back to top button