பிரான்ஸ்

பிரான்ஸில் காணாமல்போன சிறுமி! தேடுதல் ஆரம்பம்!

15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போனதை அடுத்து, அவர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல்துறையினரை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Vernouillet (Yvelines) நகரில் வசிக்கும் குறித்த சிறுமி, இறுதியாக பெப்ரவரி 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்து வெளியேறியிருந்ததாகவும், அதன் பின்னரே அவர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Fatmah Al Muqdadi எனும் குறித்த சிறுமி 1.60 மீற்றர் உயரமுடையவர் எனவும், பிரவுன் நிற தலைமுடியும், கறுப்பு நிற கண்களும் கொண்ட, மெல்லிய தேகமுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் தொடர்பில் தகவல்கள் அறிந்தால் Conflans-Sainte-Honorine நகர காவல்நிலையத்தை 01.34.90.47.57, 01.34.90.47.78 or 01.34.90.47.17. ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாக தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Back to top button