உலகம்

கனடிய அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி! அதிர்ச்சி தகவல்!

#france#

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான கனடிய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது. கொன்சவடிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். கார்பன் வரி அறவீடு செய்யும் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் நம்பிக்கையில்லா தீர்மான யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.


அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அதற்கு போதியளவு ஆதரவு கிடைக்கவில்லை. யோசனைக்கு ஆதரவாக கொன்சவடிவ் கட்சியினர் வாக்களித்த போதிலும், லிபரல், என்.டி.பி மற்றும் குபெக்கோ போன்ற கட்சிகள் எதிராக வாக்களித்திருந்தன. இந்த யோசனைக்கு ஆதரவாக கூடுதல் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

கொன்சவடிவ் கட்சிக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித திட்டங்களும் கிடையாது என ஆளும் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை, கார்பன் வரி அதிகரிப்பு மக்களை மேலும் சுமையில் ஆழ்த்தும் என கொன்சவடிவ் கட்சி தெரிவித்துள்ளது.

Back to top button