பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸ் புதிய பிரதமர்! மக்களின் நம்பிக்கையில்லா கருத்து!

கேப்ரியல் அத்தால் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர், அவர் மீது நம்பிக்கை இல்லை என 52% சதவீதமான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். Elisabeth Borne பிரதமராக இருந்தபோது ஏற்பட்ட பல்வேறு விமர்சங்களை அடுத்து, நேற்று திங்கட்கிழமை புதிய பிரதமராக 34 வயதுடைய கேப்ரியல் அத்தால் (Gabriel Attal) நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் சிறப்பாக செயற்படுவார் என உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?’ என பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதி 52% சதவீதமானோர்/ பத்தில் ஐவர் ‘இல்லை’ எனவும், 48% சதவீதமானவர்கள் ‘ஆம்’ எனவும் தெரிவித்தனர். கருத்து தெரிவித்துள்ளனர். (முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் Elisabeth Borne பிரதமராக அறிவிக்கப்பட்டபோது 53% சதவீதமான மக்கள் ‘ஆம்’ என கருத்து தெரிவித்தனர்.

Back to top button