ஜோதிடம்

2024ம் ஆண்டு மேஷ ராசியினருக்கு எப்படி இருக்கும்?

எல்லாம் நன்மைக்கே

2024ஆம் ஆண்டு மேஷம் ராசியினருக்கு காதல், தொழில் வாய்ப்புக்கள், பணவரவு, உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷம் ராசியினருக்கு வரும் 2024 ஆம் ஆண்டு முழுவதும் சனி சாதகமாக இருக்கிறார். 2024ம் ஆண்டு மே மாதத்தில் குரு பெயர்ச்சி நடக்கும் போது நீங்கள் பல வகையில் நல்ல புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். கிட்டதட்ட 8 மாதங்கள் குரு மூலம் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப பிரச்னைகள் எல்லாம் நல்லவிதமான முடிவுக்கு வரும். 2024ஆம் ஆண்டு மேஷம் ராசியினருக்கு காதல், தொழில் வாய்ப்புக்கள், பணவரவு, உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

காதல்

மேஷ ராசியினருக்கு 2024-ம் ஆண்டில் திருமண வாழ்க்கை கைகூடும். கணவன், மனைவி இடையேயான உறவு பலப்படும். திருமண உறவு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றாக சேர வாய்ப்புக்கள் அதிகம்.

தொழில்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சனியின் ஆதரவு இருப்பதால் நீங்கள் புதிய தொழிலைத் தொடங்கலாம். எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தி அடையும். குரு உங்கள் ராசியிலேயே இருப்பதால் வெளிநாட்டு பயணங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் புகழைக் கொண்டு வரும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

செல்வம்

நிதி ஆதாயம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நிலம், வீடு மனை, சொத்து போன்ற விஷயங்களுக்கான முயற்சிகள் சாதகமாக அமையும்.

ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சின்ன சின்ன நோய்கள் ஏற்பட்டு நீங்கும். பெரியளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. தைரியம், தன்னம்பிக்கை கூடும். குறிப்பாக பெண்கள், இல்லத்தரசிகளுக்கு திருப்தியான ஆண்டாக அமையும்.

மொத்தத்தில் மேஷம் ராசியினருக்கு தொழில், பணவரவு, ஆரோக்கியம் போன்றவைகள் பொற்கால ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது. மேஷம் ராசியினரே மகிழ்ச்சியுடன் அனுபவிக்கத் தயாராகுங்கள்..!

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Back to top button