பிரான்ஸ்

பிரான்ஸில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டம்! மகிழ்ச்சியில் பெண்கள்!

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா நேற்று (திங்கள்கிழமை) நிறைவேற்றப்பட்டது.
இப்போது பிரான்சின் அரசியலமைப்பில் கருக்கலைப்பு என்பது பெண்களுக்கான உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை நடைபெற்ற இரு அவைகளின் கூட்டத்தில் 780-72 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மசோதா அங்கீகரிக்கப்பட்டது.

நாட்டின் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமையை உள்ளடக்கிய முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது. France becomes first nation to make abortion a constitutional right, abortion rights, France Abortion Law, கருக்கலைப்பை அரசியமைப்பு உரிமையாக அங்கீகரித்த முதல் நாடு! நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அடுத்து நாடு முழுவதும் பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்காக போராடும் ஆர்வலர்கள் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். My Body My Choice என்று கோஷமிட்டு ஈபிள் டவர் முன் கொண்டாடினர். கருக்கலைப்பு உரிமைகள் மற்ற நாடுகளை விட பிரான்சில் அதிகமாக ஆதரிக்கப்படுகிறது.

பல்வேறு ஆய்வுகளின்படி, சுமார் 80 சதவீத பிரெஞ்சு மக்கள் கருக்கலைப்பு உரிமையாக இருக்க விரும்புகிறார்கள்.
பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal), ஒரு பெண்ணின் உடல் அவளுடையது, வேறு யாரும் உங்களுக்காக முடிவெடுக்க வேண்டியதில்லை என்று ஒரு செய்தியை அனுப்புகிறோம் என்று கூறினார்.

Back to top button