பிரான்ஸ்
பிரான்ஸில் லூயி புயலின் தாக்கம்! பாரிய மின் தடை!
லூயி புயல் (e la tempête Louis காரணமாக நாட்டில் உள்ள 90,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.30 மணி அளவிலான நிலவரம் இது. பலத்த புயல் காரணமாக மர முறிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், மின் தடையும் ஏற்பட்டுள்ளதாக Enedis அறிவித்துள்ளது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
திருத்தப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும், நாளை நண்பகலுக்கு பின்னரும் ஓரிரு இடங்களில் மின் தடை நீடிக்கும் எனவும், திருத்தப்பணிகள் சவாலானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Aiguille du Midi தொடருந்து நிலையத்தில் அதிகபட்சமாக மணிக்கு 152 கி.மீ வேகத்தில் புயல் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, Deux-Sèvres நகரில் வாகன சாரதி ஒருவர் புயலில் சிக்குண்டு பலியாகியுள்ளார். பாரிய மரம் ஒன்று முறித்து மகிழுந்தின் மீது விழுந்ததில், உடல் நசுங்கி அவர் பலியானதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.