இலங்கையில் பொலிஸாரின் அடாவடி! வெடுக்குநாரியில் பரபரப்பு!
வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி வழிபாடுகளில் கலந்துகொண்டவர்களில் 07 பேர் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று கைதுசெய்யப்பட்டு, இன்று மதியம் பிணையில் விடுதலையான ஆலய பூசகர் மதிமுகராசா, ஆலய நிர்வாக செயலாளர் தமிழ்ச்செல்வன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன், முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் கிந்துஜன் உள்ளிட்டவர்களே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறும் , பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை பொலிஸார் எடுத்து சென்றதோடு பலரை அடாவடியாக கைது செய்திருந்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 07 பேர் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதோடு ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை நாளை அல்லது திங்கள் அன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். வெடுக்குநாறி மலையில் இன்றைய தினம் இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறும் , பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
பொலிஸாரின் அத்துமீறல்
இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர். இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.