பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸ் வீதியில் துப்பாக்கிச்சூடு!

27 வயதுடைய ஒருவர் வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். Dourdan (Essonne) நகரில் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மாலை 6.30 மணிக்கு அவசர மருத்துவப்பிரிவினர் எச்சரிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவக்குழுவினர் முதலுதவி வழங்கினர்.

ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சில நிமிடங்களில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட ஆயுததாரி(கள்) அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். Évry நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Back to top button