🇫🇷பிரான்ஸ் பெண்னின் உயிரற்ற உடல்! தொடரும் சந்தேகம்!
பிரான்ஸ் நாட்டவரான பெண் ஒருவரின் உயிரற்ற உடல் சுவிட்சர்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட விடயம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பக்கத்து நாட்டில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிரெஞ்சுப் பெண் சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்திலுள்ள Allaman என்னும் பகுதியில், பிரான்சுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் அமைந்துள்ள ஜெனீவா ஏரியில், பிரான்ஸ் நாட்டவரான 46 வயது பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு அறிமுகமான ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
அந்த 46 வயது நபர் தற்போது காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து பொலிசார் விசாரணை துவக்கியுள்ளனர். உயிரிழந்த மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்த எந்த தகவலையும் பொலிசார் வெளியிடவில்லை.