பிரான்ஸ்

பிரான்ஸில் பரவும் நோய்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

சாதரணமாக பெப்ரவரி மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கும் மகரந்த ஒவ்வாமை நோய் (Allergie aux Pollens) இவ்வாண்டு ஜனவரி மாதத்தின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்து விட்டது என பிரான்ஸ் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நோயினால் பிரான்சில் முக்கால் வாசிக்கும் அதிகமானோர் பாதிப்படைவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மகரந்த ஒவ்வாமை நோய் (Allergie aux Pollens) ஏற்பட காலநிலை ஐந்து செல்சியஸ் வெப்ப நிலைக்கு மேல் இருக்கவேண்டும், இவ்வாண்டும் வெப்ப ஆண்டாக இருக்கப் போகிறது என்பதினை இது காட்டுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மகரந்த ஒவ்வாமை நோய் (Allergie aux Pollens) சிலருக்கு சாதாரணமாக கடந்து செல்லும், பலரும் ஆபத்தான நோயாகவும் மாறிவிடும் என தெரிவிக்கும் செய்திக் குறிப்பு, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான பாதிப்பு 2% சதவீதத்தில் இருந்து 3% சதவீதமான மக்களையே பாதித்தது என்றும், இப்போது 25% சதவீத மக்களைப் பாதிக்கின்றது எனவும் 2050ல் 50% சதவீத மக்களை குறித்த நோய் கடுமையாக பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகரந்த ஒவ்வாமை நோயினால் (Allergie aux Pollens) பாதிப்படையாமல் இருக்க, பகல் நேரத்தில் சாளரங்களை சாத்திவைத்தல், வெளியே செல்லும் போது முகமூடிகளை அணிதல், இரவில் வீட்டிற்கு வந்ததும் தலை முடி உட்பட உடலை நன்கு கழுவுதல், தேவையற்ற பயணங்களை கைவிடுதல் போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Back to top button