புலம்பெயர் நாடுகளில் இருந்து பணம் அனுப்பும் உறவினர்களுக்கு வற் வரி காரணமாக புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ள வற் வரி தொடர்பில் எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் வரியானது நிலையான வைப்பில் வைத்திருப்போர் அதனை மீளப்பெறும் போது தற்போதும் நடைமுறையில் உள்ள பிடித்துவைத்திருத்தல் வரியை அதிகரிப்பதாக இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
குறிப்பாக 18% வற் வரியை இந்த வைப்புகளுக்கு அறவிடவுள்ளதாக நிதியமைச்சு அறிவிற்கும் பட்சத்தில் அவை பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
புலம்பெயர் நாடுகளிலிருந்து பணம் அனுப்பும் உறவினர்களுக்கு காத்திருக்கும் புதிய சிக்கல்