தாயகம்

22 வயது யுவதியால் பரபரப்பான இலங்கை விமான நிலையம்!

இலங்கையிலிருந்து இஸ்ரேல் திரும்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்த இஸ்ரேலிய யுவதி ஒருவரின் பயணப் பொதியில் 5.56 மில்லிமீற்றர் தோட்டாக்கள் கப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


யுவதியின் பயணப் பொதியில் சிக்கிய தோட்டாக்களை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து இன்று (04) அதிகாலை விமான நிலையப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பயணப் பொதியில் தோட்டாக்கள் இஸ்ரேல் இராணுவத்தில் பணியாற்றிய 22 வயதுடைய யுவதி ஒருவர் தனது நண்பியுடன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று (04) காலை 1.55க்கு துபாய்க்கு புறப்பட்ட விமானத்தில் செல்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அங்கு அவர் கொண்டு வந்திருந்த பொதியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேனிங் இயந்திரம் மூலம் சோதனை செய்தபோதே தோட்டாக்கள் மீடகப்பட்டுள்ளன. மேலும் குறித்த இஸ்ரேல் யுவதி கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Back to top button