பிரான்ஸ்

பிரான்ஸில் இன்று பதிவான புயலின் வேகம்! முழு விபரம் உள்ளே!

இன்று பரிஸ் உட்பட இல் து பிரான்ஸ் மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் 124 கிலோமீற்றர் வேகத்தில் புயல் பதிவானது.

லூயி (Louis) என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்திருந்தன. ஈஃபிள் கோபுரம் கடந்த மூன்று நாட்களாக முடப்பட்டுள்ள நிலையில், இன்று அதன் உச்சியில் அதிகபட்ச புயல் தாக்கம் பதிவானது. தலைநகர் பரிசில் 94 கி.மீ வேகத்திலும், Yvelines மாவட்டத்தில் 102 கி.மீ வேகத்திலும் புயல் பதிவானது.

Back to top button