தாயகம்

போலி விசாவால் கட்டுநாயக்காவில் சிக்கிய நால்வர்!

மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட போலி கிரேக்க நாட்டு விசாக்களுடன் ஐரோப்பா செல்ல முற்பட்ட 4 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரே குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

40 இலட்சம் ரூபா கொடுத்து விசா ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாவைத் தரகர் ஒருவரிடம் கொடுத்து சந்தேக நபர்கள் விசா பெற்றதாக கூறப்படுகின்றது. மேற்படி 4 பேரும் இன்று (25) பஹ்ரைன் வழியாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 21 முதல் 47 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கைதான விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Back to top button