உலகம்தாயகம்

ஈழத்து வம்சாவளி பெண்ணிற்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம்! வாழ்த்துக்கள்!

#france news#

ஈழத்து வம்சாவழிப் பெண்ணுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம் லண்டனில் இடம்பெற்ற சர்வதேச பரதநாட்டிய போட்டியில் கலந்து கொண்டு ஈழத்து வம்சாவழியைச் சேர்ந்த பெண்ணொருவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் லண்டனிலுள்ள நேரு அரங்கத்தில் இடம்பெற்ற நடனப் போட்டியிலேயே இவர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சிலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரதிபா சங்கம்: இந்திய நடனம் மற்றும் இசைக்கான 2வது சர்வதேசப் போட்டியிலேயே இவர் வெற்றியினை ஈட்டியுள்ளார்.

சர்வதேச ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற தரேண்யா ஸ்ரீஹரன், என்பவரே லண்டனை பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து வம்சாவழியைச் சேர்ந்தவராவார். சர்வதேச ரீதியில் இவருக்கு கிடைத்த அங்கீகாரத்திற்கு பலதரப்பட்டோராலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button