தாயகம்

இலங்கையில் இங்கிலாந்து பெண்ணின் மோசமான செயல்!

#france news#

வீடான்றில் உள்ள பொருட்களை திருடி அவற்றை இரகசியமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் இங்கிலாந்து பெண்ணும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. விமானப்படை அதிகாரி ஒருவரால் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட வீட்டின் பொருட்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் 38 வயதுடைய இங்கிலாந்து பட்டதாரியும் அவரது தாயுமாவார். தாயும் மகளும் வீட்டில் இருந்த 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடி இரகசியமாக விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரல்லை பிரதேசத்தை சேர்ந்த குறித்த விமானப்படை அதிகாரி, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சந்தேக நபர்களுக்கு இந்த வீட்டை பெறுமதியான பொருட்களுடன் மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ளார்.
இந்த குத்தகை ஒப்பந்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Back to top button