தாயகம்

இலங்கையில் ஒரு மணித்தியாலத்திற்கு 20ஆயிரம் சம்பாதிக்கும் பெண்! வெளியான அதிர்ச்சி தகவல்!

3 சிறுவர்களை வைத்து ஒரு மணித்தியாலத்துக்குள் 20 ஆயிரம் ரூபாவை சம்பாதித்ததாக கூறப்படும் யாசகம் எடுக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – ஹைட் பார்க் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட பெண் யாசகம் எடுக்கும் பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண் ஒருவர் குறிப்பிட்ட மூன்று சிறுவர்களிடம் நன்கொடையாக பணத்தை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் இந்த பணத்தை எடுத்து தன்வசம் வைத்தனை அவதானித்த நன்கொடை வழங்கிய பெண், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து சந்தேக நபர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் மூன்று சிறுவர்களும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டனர்.

சந்தேக நபரான பெண் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் மூன்று சிறுவர்களில் இருவரை மீரிகம பராமரிப்பு இல்லத்தில் வைக்கவும் அடையாளம் காணப்படாத மற்றுமொரு சிறுவனை மொரட்டுவை சிறுவர் காப்பகத்தில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Back to top button