தாயகம்

யாழில் சாரதியின் அவசரத்தால் பரிதாபமாக பலியான பெண்!

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் சாரதியின் அவசரத்தால் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து , குறித்த பேருந்தின் வழித்தட அனுமதி வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இரத்து செய்யப்பட்டள்ளது. கடந்த திங்கட்கிழமை ( 19) பேருந்தினால் பெண்ணொருவர் இறங்க முற்பட்ட வேளை , சாரதி அவசரமாக பேருந்தினை நகர்த்திமையால், பெண் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

வேகத்தில் செல்லும் சாரதிகள் தொடர்பில் முறையிடலாம்
இதனையடுத்து குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் , சாரதியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , நீதிமன்ற உத்தரவில் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினர் விசாரணைகளை முன்னெடுத்து, பேருந்தின் வழித்தட அனுமதியினை இரத்து செய்துள்ளனர்.
அதேவேளை பேருந்துகள் போட்டி போட்டு ஓடுவதனாலையே அதிகளவான விபத்துகள் இடம்பெற்று வருவதாகவும், அவ்வாறு அதிகவேகமாக பேருந்துகளை செலுத்தும் சாரதிகள் தொடர்பில், யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினருக்கு முறையிடலாம் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button