தாயகம்

யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! அழுகிய நிலையில் பெண்னின் சடலம்!

யாழ்ப்பாணத்தில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்றையதினம் (22-02-2024) குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் 66 வயதுடைய சின்னத்துரை ஜெகதீஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேவேளை, அவரது இறப்புக்கான காரணம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button